மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று உணவு, உடை, உறைவிடம். நமது மக்கள் தினமும் உணவிற்காக உழைக்கிறார்கள். அந்த உழைப்பின் களைப்பைத் தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அந்த இடமானது வாடகை கொடுத்து இருக்கும்பொழுது அவற்றுள் ஏற்படும் சிக்கல்கள் அதிகம். எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது என்ற பழமொழிக்கு இணங்க ஒவ்வொரு தனி மனிதரும் தங்களுக்கான சொந்த வீட்டை நிர்மாணிப்பதில் தீவிரமாக உள்ளனர். ஒரு சாமானியனின் மிகப்பெரிய கனவாக வீடு கட்டுவது இருக்கிறது.
கல்யாணத்தைப் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்று பழமொழி சொல்வதை கேட்டுள்ளேன். வீடு கட்டுவது என்பது அவ்வளவு கடினமான ஒன்றா? அல்லது எளிமையான ஒன்றா?
எனக்கு தெரிந்த வகையில் வீடு கட்டுவது என்பது எளிமையான ஒன்றுதான், ஆனால் அதற்கு கட்டுமானத்தின் அடிப்படைகளை தெரிந்துகொள்ள வேண்டும்
கட்டுமானத்தின் அடிப்படைகள்
முதலில் அவசியமான தேவை வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம்
வேலை ஆட்களை தேர்ந்தெடுத்தல்
மெட்டீரியல்கள் மற்றும் தகுதி வாய்ந்த பொருட்களை கண்டறிதல்
கட்டுமானத்தின் அடிப்படை நிலைகள்
இவற்றை பற்றி தெரிந்து கொண்டாலே நாம் எளிமையாக வீட்டை கட்டத் தொடங்கி விடலாம்
எனக்குத் தெரிந்த வகையில் கட்டிடத்தின் அடிப்படை நிலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இடம் தேர்ந்தெடுத்தல்
அஸ்திவாரம் அமைப்பதற்கு முன் மார்க்கிங் செய்தல்
மார்க்கிங் செய்த பிறகு சரியான அளவுகளில் குழி எடுத்தல்
குழிகளுக்குள் பொறியாளர் உதவியுடன் பெறப்பட்ட அளவுகளில் ப்ளூ மெட்டல் மற்றும் மணல் பரப்ப வேண்டும்
தேவையான இடங்களில் காலம் அமைத்தல் காலத்தின் அளவுகள் சரிபார்த்தல்
இயல்பான நிலத்தின் மேல் பகுதியில் பிங்க் பீம் போட வேண்டும்
பேஸ்மண்ட் அமைத்தல்
செங்கல் சுவர் கட்டுதல்
லிண்டல் பீம் அமைத்தல்
லின்டல் பீமிற்கு மேல் சுவர் எழுப்புதல்
ஸ்லாப் அமைத்தல்
வயரிங் சம்பந்தமாக சுவரில் உடைக்கும் வேலைகள் செய்தல்
உள் பூச்சி மற்றும் வெளி பூச்சு பூசுதல்
உள்புறம் வெளிப்புறம் வெள்ளை அடித்தல்
மேலும் சில வேலைகள் அவற்றை அடுத்த பதிவுகளில் விரிவாக காணலாம்