இன்றைய வலைப்பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒரு சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு என்ன?
இன்றைய காலகட்டத்தில் எனக்குத் தெரிந்த வகையில் ஒரு சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு என்ன என்ற கேள்வி வலைத்தளங்களில் அதிகமாக காணப்படுகிறது
இக்கேள்விக்கான பதில்கள் சரியான முடிவுகளை தருவதில்லை சிலர் 1300 என்றும் சிலர் 1800 என்றும் ஒரு சிலர் 2500 என்றும் சதுரடிக்கு கூறுகின்றனர்.
உண்மையில் சதுர அடிக்கு 1500 என்ற விதத்தில் கட்டிடம் கட்ட முடியுமா?
அப்போது சதுர அடி 2500 என்று கூறுபவர் அதிக லாபம் பார்க்கிறாரா?
அதற்கான பதில்கள் சிறிது சிறிதாக இப்பதிவில் பதிவிடுகிறேன் மொத்த பதிவுகள் முடிந்தவுடன் உங்களுக்கு வீடு கட்ட ஆகும் செலவுகளை நீங்களே புரிந்து கணக்கிடலாம்
உண்மையில் ஒரு கட்டிடத்தில்
SQFT 1500 முதல் 2500 வரை செலவுகள் கணக்கிடப்படுகிறது. இதில் 1500 முதல் 2500 வரை என்பது அதில் பயன்படுத்தப்படும் METERIAL பொறுத்து மாறுபடலாம் தேவையை பொருத்து மாறுபடலாம் இப்பதிவில் ஒரு வீட்டிற்கு முக்கியமான தேவைகள் ஏதேனும் இருப்பினும் அதை இதனுடன் இணைந்து கணக்கீடு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இப்பொழுது ஒரு வீடு கட்டுவதற்கு ஆயிரம் சதுரஅடி என்று கணக்கிடாமல் நான் பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் அதாவது ஒரு சதுரம் அதனுடன் ஒரு டாய்லெட் இணைத்து மொத்தத்தில் 124 ஸ்கொயர் ஃபீட்டிற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதை கணக்கீடு செய்வோம்
ஏன் இவற்றில் TOILET சேர்க்கிறோம் என்றால் TOILET TILES வேலைகள் மற்றும் TOILET FITINGS இவைகளின் மதிப்பு இணைத்து காட்டப்படும் அப்பொழுது நமக்கு சரியான மதிப்பு தெரிந்து கொள்ளலாம்
நாம் இப்போது ஒரு PLAN கிரியேட் செய்ய வேண்டும்
படத்தில் கண்ட PLAN படி பத்துக்கு பத்து என்ற ஒரு ரூமை அதனுடன் நினைத்த TOILET காட்டப்படுகிறது இப்படத்திற்கு கீழே FUNDATION அளவுகளும் காட்டப்படுகிறது காலம் மற்றும் பீம் இவைகளின் படமும் இவைகளில் காட்டப்படுகிறது.
இப்படத்தின் உதவியுடன் நம்மளால் தேவையான அளவு மெட்டீரியல்கள் கணக்கீடு செய்ய முடியும் அதன் மூலம் விலையும் ஆகும் செலவும் கணக்கிடப்படும்
நாம் நம்முடைய இடத்தை சரி செய்து அவற்றின் எல்லைகளை சரியாக மார்க் செய்ய வேண்டும் எல்லைகள் சரியாக மார்க் செய்த பிறகு பித்தாகரஸ் தேரம் பயன்படுத்தி அவற்றின் கோணம் மூளையின் அளவு சரியாக உள்ளதா என்று குறித்துக் கொள்ள வேண்டும்
பெரும்பாலும் இந்த மூலைவிட்டங்கள் திருப்புவது என்று சொல்வார்கள் இதை சரியாக செய்து விட்டாலே வீட்டில் உள்ள அனைத்து சுவர்களும் 90 டிகிரி சரியாக கிடைக்கும்
SOIL EXCAVATION
நாம் நம் மனையின் காலத்தின் அளவுகளுக்கு ஏற்ப SET BACK விடப்பட்டு காலத்தின் CENTER POINT கண்டறிந்து அதன் மூலம் அனைத்து காலத்தின் CENTER POINT இணைத்து அதை சுண்ணாம்பு பவுடரால் மார்க் செய்து கொள்ள வேண்டும்
மார்க் செய்த இடத்தை ஆட்களின் உதவியுடனும் அல்லது ஜேசிபி உதவியுடன் 5×5 அல்லது தேவைக்கேற்ப குழி எடுக்க வேண்டும் குழியில் 3”மணல் பரப்பி பிறகு 6”பெரிய ஜல்லி பரப்பி திம்சின் உதவியுடன் ஒன்றுக்கு ஐந்து என்ற விதத்தில் சிமெண்ட் சாந்தை பரப்பி தலமாக குழியின் உள்ளே செய்யப்பட வேண்டும்
மீண்டும் ஆரம்பத்தில் செய்த மார்க்கிங் போல மீண்டும் அதே புள்ளியை இணைத்து காலத்தின் மையப் புள்ளி கண்டறிய வேண்டும் புள்ளியையும் மேலிருந்து குழியினுள் மையத்தை தூக்கு கொண்டு உதவியுடன் கீழே மார்க் செய்ய வேண்டும் பிறகு காலத்திற்கு தேவையான கம்பி மற்றும் சூட்டிங் இருக்கு தேவையான கம்பிகள் கட்டி குழியினுள் இறக்க வேண்டும் காலத்தை தூக்கு கொண்டு உதவியுடன் செங்குத்தாக நிற்பதற்கு வழி செய்ய வேண்டும்
காலம் நேராக இருக்க வேண்டும் இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது வீட்டின் சுவர் கட்டும் பொழுது காட்டிக் கொடுத்து விடும் அது மட்டுமல்லாது லோடை தாங்கும் திறனும் சற்று குறைய வாய்ப்புள்ளது
அதனால் கவனமாக காலத்தை செங்குத்தாக நிறுத்த வேண்டும்