வெஜிடேபிள் அவல் கட்லெட்
தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்
உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்தது)
வெங்காயம் – 2
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
மைதா – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்குகளை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அவலை நீரில் கழுவி, நீரை வடித்துவிட்டு ஊற வைக்கவும்.
இதனுடன் பிரட் தூளுக்கு பதிலாக அரைகப் அவுலை 5மிளகு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து mixcy – யில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, ஊற வைத்த அவல், நருக்கிய வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்த கலவையை கட்லெட் வடிவில், செய்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மைதாவை எடுத்து, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒவ்வெரு கட்லெட் துண்டுகளையும் எடுத்து, முதலில் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி,மேலும் mixcy – யில் அரைத்து வைத்துள்ள அவுல் தூளில் பிரட்டி,பின்னர் ஒரு தோசை கல்லில் அல்லது வாணலியில் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கட்லெட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான வெஜிடேபிள் அவல் கட்லெட் தயார்.