Contents
சிவன் கனவில் வந்தால் என்ன அர்த்தம்:
- காணும் கனவுகள் நம் நினைவில் இருப்பதில்லை. சில கனவுகள் மட்டுமே நமது நியாபகத்தில் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம்.
- இறைவனை கனவில் காண்பது நல்லதே. நீங்கள் இறையருள் வேண்டுமென நினைப்பவராய் இருக்கக்கூடும்.
- இனி உங்கள் பூர்வஜென்ம புண்ணியத்தால், இறைவனின் அருள் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். நல்லகாரியங்களை இறைவனைதொழுது நம்பிக்கையோடு துவங்கி எந்த தடையுமின்றி நினைத்ததுபோலவே நிறைவேறும்
- சிவ பெருமான் மற்றும் சிவ பெருமானுடன் தொடர்புடைய சில விஷயங்களை கனவில் கண்டால் அதற்கு என்ன அர்த்தம், அவற்றால் என்ன பலன் என இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- சிவலிங்கத்தை கனவில் காண்பது வெற்றி, பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள், பணம் மற்றும் பெரும் செல்வம் உங்களை தேடி வரப் போகிறது. எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்று அர்த்தம்
வெள்ளை நிறத்தில் சிவலிங்கத்தை கனவில் கண்டால், பின்வரும் காலங்களில் உங்கள் புகழ் அதிகரிக்கம்
கனவில் பார்வதி பரமேஸ்வரரைக்இணைந்து அர்த்தநாதீஸ்வர் கண்டால் . உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது.
கனவில் பார்வதி பரமேஸ்வர் புதிய வாய்ப்புக்கள் உங்களை தேடி வரப் போகிறது என்று அர்த்தம். உணவு, உணவு தானியங்கள், பயணம் ஆகியவற்றால் உங்களுக்கு பெரும் லாபம் கிடைக்க போகிறது - சிவன் நாட்டியம் கனவு கண்டால் உங்களின் பிரச்சனைகள் விரைவில் தீர போகிறது என்பதை உணர்த்துவதாகும். சில போராட்டங்களுக்கு பிறகு நீங்கள் செல்வத்தை பெற போகிறீர்கள் என்பதை சொல்லும் அறிகுறியாகும்.
- “நந்தி பகவான்” உங்களுடைய கனவில் வந்தால் தொழில் ரீதியாகவும் இதுநாள் வரையிலும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் கூடிய விரைவில் நீங்க போகிறது
- நீங்கள் கனவில் ருத்ராட்சத்தை கண்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை குறிப்பதாகும். இந்த கனவு மூலம் உங்கள் மனம் சார்ந்த பிரச்சனை மற்றும் நோய் விரைவில் குணமடையும்.